தெற்கு சூடான் விமான நிலையத்தில் மீண்டும் விமானப் போக்குவரத்து

  • 12 ஜூலை 2016

தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்திய மோதலை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது.

சில நாடுகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் நாட்டு மக்களை ஜூபாவிலிருந்து வெளியேற்றுவதாக தெரிவித்துள்ளன.

திங்களன்று, பிராந்திய கிழக்கு ஆப்ரிக்க அமைப்பான ஐடிஏடி, பொதுமக்களுக்கு உதவும் வகையில் மனிதாபிமான உதவி பாதைகளைத் திறக்கவும், மேலும் திறம்பட்ட அமைதி காக்கும் பங்கின் ஒரு பகுதியாக விமான நிலையத்தை பாதுகாக்கவும் ஐ.நா வின் படைகளுக்கு அழைப்பு விடுத்தது.

அதிபர் மற்றும் துணை அதிபருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சுமார் நாற்பதாயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

திங்களன்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் இதுவரை தொடர்கிறது.