ஜிம்பாப்வேயில் இவான் மாவாரியிடம் காவல் துறையினர் விசாரணை

  • 12 ஜூலை 2016

ஜிம்பாப்வேயில் கடந்த வாரம் அரசுக்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய இவான் மாவாரி காவல் துறை அதிகாரிகளால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டார்.

Image caption இவான் மாவாரி

ஹராரேயில் உள்ள மத்திய காவல் நிலையத்தில் மாவாரி நுழைந்ததை ட்விட்டர் வலைதள செய்திகள் கூறுகின்றன. மாவாரி ஒரு போதகர் ஆவார்.

அவர் தான் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாகவும், மக்களளை தனக்காக பிரார்த்திக்குமாறும் கூறினார்.

மாவாரி மற்றும் #THISFLAG சமூக வலைதள இயக்கம், கடந்த வாரம், கொடுக்கப்படாத சம்பளம், வறுமை மற்றும் ஊழலிற்கு எதிராக தொடர் வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்து நடத்தியது.

புதன்கிழமையன்று அவர்கள் தேசிய பணிநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர்