டேவிட் கேமரன் இன்று பதவி விலகுகிறார்

  • 13 ஜூலை 2016

ஆறு ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, இன்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பதவி விலகும் கேமரன்

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்விகள் நிகழ்ச்சியில் கடைசியாக இன்று கலந்து கொண்டுவிட்டு, பின்னர் அவர் பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரிட்டிஷ் அரசியை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுப்பார்.

கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் உறுப்பினராகத் தொடர வேண்டுமா என்படு குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், தொடரவேண்டும் என்று அவர் எடுத்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு கிடைக்காததால் பதவி விலகப் போவதாக கேமரன் அறிவித்தார்.

அடுத்தபடியாக பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் தெரிஸா மே. அவர் திங்கட்கிழமையன்று கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருத்துக்கணிப்பில் அவரும் கேமரன் எடுத்த , பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்ற நிலைப்பாட்டையே எடுத்திருந்தாலும், கருத்துக் கணிப்பு முடிவை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை அமல்படுத்தப்போவதாக உறுதியளித்திருக்கிறார்.