எகிப்தில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்கள் ; அம்னெஸ்டி குற்றச்சாட்டு

  • 13 ஜூலை 2016

எகிப்திய ஆட்சியாளர்கள், எதிராளிகளை அச்சுறுத்த மற்றும் அவர்களை தங்கள் கருத்துக்கு இணங்கச் செய்ய மக்களை வலுக்கட்டாயமாகக் காணாமல் போகச் செய்ய வைப்பதாக, சர்வதேச மனித உரிமை அமைப்பான, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

ஒரு புதிய அறிக்கையில், 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து எகிப்தில் காணமல் போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாக அந்த மனித உரிமைக் குழு ஆவணப்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில், நூற்றுக்கணக்கான மாணவர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் எந்த வித தடயமும் இன்றி காணாமல் போயியுள்ளனர் என்றும், அதில் 14 வயதான இளம் வயதினரும் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு பேர் பாதுகாப்பு படையினரால் இழுத்துச் செல்லப்படுகின்றனர்; சில சமயங்களில் அவர்கள் மாதக் கணக்கில் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் நீதித்துறையும் உடந்தையாக இருப்பதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது.