இத்தாலி ரயில் விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்

  • 13 ஜூலை 2016

தெற்கு இத்தாலியில் செவ்வாய்க்கிழமையன்று, 23 பேரை பலிவாங்கிய ரயில் விபத்தின் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

படத்தின் காப்புரிமை ITALIAN FIREFIGHTERS AP

பாரி நகரில் அதி வேகத்தில் வந்த இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் மோதிக்கொண்ட இடிபாடுகளை அகற்ற இரவு முழுவதும் கிரேன் மற்றும் பளு தூக்கும் இயந்திரங்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றன.

இந்த விபத்து தொலைதூரத்திலுள்ள ஒரு கிராமப்புற பகுதியில் நடைபெற்றதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மீட்பு நடவடிக்கையில் ராணுவத்தினர் உதவி வருகின்றனர்.

இத்தாலியின் பிரதமர் மட்டியோ ரென்சி சம்பவ இடத்தை பார்வையிட்டு, இரண்டு ரயில்களும் ஒரே நேரத்தில் ஒரே தண்டவாளத்தில் வந்தது குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்ப்டும் என உறுதியளித்தார்.