அரியணையிலிருந்து விலக ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ முடிவு

  • 13 ஜூலை 2016

வரும் ஆண்டுகளில், தனது அரியணையிலிருந்து விலகிட ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ, தன் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக ஜப்பானின் தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ

82 வயதாகும் ஜப்பான் பேரரசர் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்துள்ளார்.

அகிஹிட்டோவின் பதவி விலகல், அவரது மகனான பட்டத்து இளவரசர் நாருஹிட்டோ ஜப்பான் பேரரசரின் அரியணையான, கிரிஸான்தமம் அரியணையிலேற வழிவகுக்கும்.

1989-ஆம் ஆண்டில் தனது தந்தை ஹிரோஹிட்டோவை தொடர்ந்து, பேரரசர் அகிஹிட்டோ அரியணைக்கு வந்தார்.

கடந்த 2011-ஆம் ஆண்டில், பேரழிவினை ஏற்படுத்திய பூகம்பம் மற்றும் சுனாமியை தொடர்ந்து, இது வரை நடைமுறையில் இல்லாத மிகவும் அசாதாரணமான நடவடிக்கையாக பேரரசர் அகிஹிட்டோ நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சியில் உரையாற்றினார்.