ஜோர்டான் எல்லையில் சிரியா மக்களுக்கு உதவிகள் விநியோகம்: ஜோர்டான் அரசு ஒப்புதல்

ஜோர்டான் எல்லையில் எந்த நாட்டுக்கும் சொந்தமற்ற நிலப்பரப்பில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த சிரியா மக்களுக்கு உதவிகளை விநியோகம் செய்ய, ஜோர்டான் அரசு ஓப்புதல் வழங்கியுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AP

கடந்த மாதம் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு ஜோர்டான் நாட்டு சிப்பாய்கள் ஏழு பேரை முகாமிற்கு அருகில் தற்கொலை தாக்குதலில் கொன்றதையடுத்து, ஜோர்டன் தனது எல்லையை மூடியது.

ஜோர்டான் குடியிருப்புவாசிகளின் நிலை குறித்து கவலைகள் வளர்ந்து வருகின்றன.

ஆனால் ஐ.நாவின் உணவு முகமை, (WFP) , ஒரே ஒரு முறை உதவிகளை வழங்க ஜோர்டான் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.