விரக்தி வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்

  • 13 ஜூலை 2016

அமெரிக்கர்கள் இனப் பிரச்சனை குறித்த பதற்றங்கள் பற்றி விரக்தியடையும் மனோநிலையை நிராகரிக்குமாறு அதிபர் ஒபாமா வலியுறுத்தியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption டலஸ் நகரத் தலைமைப் போலிஸ் அதிகாரியை தழுவுகிறார் ஒபாமா

வெளியிலிருந்து தெரிவது போல் நாடு அவ்வளவு பிரிந்து கிடக்கவில்லை என்று அவர் கூறினார்.

டலஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து போலிசாருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டலஸ் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஒபாமா, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, புஷ்ஷின் மனைவி லாரா புஷ்

பல சிறுபான்மைக் குழுக்கள் பாரபட்சத்தை எதிர்கொள்கின்றன என்று ஒப்புக்கொண்ட ஒபாமா , ஆனால் பெரும்பான்மையான போலிசார் கடுமையான, ஆபத்தான பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் மதிக்கப்படவேண்டியவர்கள் , மாறாக அவர்களை காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், மாற்றுக் கருத்துகளை மதிக்காதவர்கள் என்று முத்திரை குத்துவது கூடாது என்றார்.

டலஸ் செல்லும் வழியில், ஒபாமா , தேசமெங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிய இரு கருப்பினத்தவர்கள் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், அவர்களது உறவினர்களுடன் தொலைபேசியில் பேசினார்.