பிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார்

படத்தின் காப்புரிமை AFP
Image caption ராணி எலிசபெத்துடன் தெரீசா மே சந்திப்பு

பக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார்.

ராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே ஆவார்.

படத்தின் காப்புரிமை

உள்துறை அமைச்சராக இருந்த தெரீசா மே, மார்க்கரெட் தாட்சருக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அநீதிக்கு எதிராக போராடுவேன்

ராணி எலிசபெத்தை சந்தித்த பிறகு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, டவ்னிங் தெருவுக்கு தனது கணவர் பிலிப்புடன் வந்த தெரீசா மே, அங்கு கூடியிருந்த சர்வதேச செய்தியாளர்களின் மத்தியில் உரையாற்றினார். தனது அரசு சலுகை படைத்த சிலருக்காக மட்டும் செயல்படாமல், சாாதாரண மக்களுக்காகப் போராடும் என்று தெரிவித்தார். ஏழைகள், பெண்கள், இனச்சிறுபான்மையினர் மற்றும் இளையோருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தனது அரசு போராடும் என்று அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை
Image caption தெரீசா மேயை வரவேற்கும் பிரதமர் இல்ல ஊழியர்கள்

பிரதமராக டேவிட் கேமரனின் செயல்பாடுகளுக்கு அவர் புகழாரம் சூட்டினார். டேவி்ட் விட்டுச் சென்ற வழியில் தான் தொடர உள்ளதாகவும், அவர் பொருளாதார மேம்பாட்டுக்காக மட்டுமன்றி, சமூக நீதிக்காகப் போராடினார் என்றும் தெரீசா புகழ்ந்துரைத்தார்.

விடைபெற்றார் கேமரன்

தனது மனைவி சமந்தா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வந்து தனது பதவி விலகல் கடிதத்தை டேவிட் கேமரன் ராணியிடம் சமர்ப்பித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தன் கணவர் பிலிப்புடன் அரண்மனைக்கு வந்த மே, மிக கவனமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

படத்தின் காப்புரிமை AFP

முன்னதாக டேவிட் கேமரன் நாடாளுமன்றத்தில் தனது இறுதி அமர்வு கேள்வி நேரத்தில் மகிழ்ச்சியோடு பங்கேற்றார். அவர் தெரீசா மே பிரிட்டனை முடிந்த வரையில் ஐரோப்பிய ஒன்றியதோடு நெருக்கமாக வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

பிரதமர் இல்லத்தில் இருந்து கிளம்புவதற்கு முன் பேசுகையில், கேமரன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தான் பார்த்த இருந்த நிலையில் இருந்து நாட்டை உறுதியான நிலையில் விட்டுச் செல்வதாக தெரிவித்தார்.

அவர் தனக்கு ஆதரவு தந்த சக பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தனது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை AFP

அவர் மேலும் தெரீசா மே வலுவான தலைமையை தருவார் என்றும் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.