ஐ.நா பொதுச் செயலருக்கான தேர்தலில் வெளிப்படைத்தன்மைக்கான முயற்சி

ஐ.நாவின் அடுத்த தலைமைச் செயலருக்கான தேர்தலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் நோக்கில், முன் எப்போதும் இல்லாத வகையில் வேட்பாளர்களான 12 பேரில் 10 பேர் உலக அளவில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றனர்.

படத்தின் காப்புரிமை AP

பொதுச் சபையில் இருந்த அழைக்கப்பட்ட பார்வையாளர்கள் மற்றும் பேட்டியை நடத்தியவர்களால், அவர்களிடம், சிரியாவின் போர் உட்பட பருவ நிலை மாற்றம், மற்றும் தலைமைத்துவம் குறித்து வரிசையான கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆனால் தேர்தலில் வெளிப்படைத்தன்மை எல்லாம் ஒரு வரையறைக்குட்பட்டதுதான் ; அடுத்த வருடம் பொது சபையால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு பிரதிநிதியை பரிந்துரைக்க பாதுகாப்பு சபை அடுத்த வாரம் ரகசிய வாக்கெடுப்பை நடத்தவுள்ளது.