முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவரின் புதிய பதவி: பிரான்ஸ் அதிபர் கருத்து

  • 14 ஜூலை 2016

அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியான கோல்ட் மேன் சாக்ஸில் தனது புதிய பணியை ஏற்கவிருக்கும், முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவெல் பாரோசோவைப் பற்றிய விமர்சனத்தில் தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சிஸ் ஒல்லாந்.

படத்தின் காப்புரிமை AFP

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவர் ஆலோசனைகள் வழங்கக்கூடும் என்பதால் அறநெறிப்படி இது ஏற்கத்தக்கது அல்ல என ஒல்லாந் தெரிவித்துள்ளார்.

பாரோசோ இந்த பணியை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஐரோப்பாவிற்கு எதிரானவர்களுக்கு உதவுவதாக புதன்கிழமையன்று பிரான்ஸ் அரசு கருத்துத் தெரிவித்திருந்தது.

முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்கள், பணியிலிருந்துச் சென்று 18 மாதங்களுக்கு பிறகு புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளலாம்.

பாராஸோவின் பணிக்காலம் 20 மாதங்களுக்கு முன்னதாக நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.