லண்டன் இசைக் கலைஞர் டேவிட் பொயின் தனிப்பட்ட கலைப்பொருட்கள் காட்சிக்கு வருகிறது

புகழ்பெற்ற ஆங்கில இசை கலைஞர் டேவிட் போயியின் தனிப்பட்ட கலைப்பொருட்கள் இன்று முதல்முறையாக வெளியிடப்படவுள்ளன.

படத்தின் காப்புரிமை Jimmi King

டேவிட் போயியின் வீடுகளில் அலங்கரித்துக் கொண்டிருந்த சுமார் 300 கலைப் பொருட்கள் அனைத்தும், நவம்பரில் ஏலத்தில் விடப்படுவதற்கு முன்பாக லண்டன் ஏல நிறுவனமான, சோத்பிஸ் நிறுவனத்தில், காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

18 மில்லியன் டாலர்களுக்கும் மேலான மதிப்புடைய இந்த கலைத் தொகுப்புகளில் டாமியன் ஹிர்ஸ்ட், ஹென்றி மூர் மற்றும் பிரான்க் ஆவர்பாஹ் போன்றோரின் படைப்புகளும் அடங்கும்.

அதில் பெரும்பாலானாவை நவீன மற்றும் தற்கால பிரிட்டன் ஓவியர்களின் படைப்புகள்; ஆனால் இந்த சேகரிப்பில் பிரான்ஸ் நாட்டின் நவீனவாதி மார்சல் டூஷோங் வடித்த சிலை மற்றும் அமெரிக்க ஓவியர் ஜான் மிஷெல் பாஸ்கியாவின் சுவர்க் கிறுக்கல் சித்திரமும் ( கிராஃப்பிட்டி) அடங்கும்.