கியூபாவின் பொருளாதார அமைச்சர் மரினோ முரில்லோ பதவி விலகல்

  • 14 ஜூலை 2016

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தீவிர வேகக்குறைவு அறிகுறிகளுக்கு மத்தியில், கியூபாவின் பொருளாதார அமைச்சர் மரினோ முரில்லோ, தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

Image caption மரினோ முரில்லோ

ஆனால், தனது துணை அதிபர் பதவியை மரினோ முரில்லோ தக்க வைத்துக் கொள்வார்.

பொருளாதார அமைச்சரின் பதவி விலகல் முடிவு, கியூபாவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருவதாக நிலவும் உணர்வை மேலும் அதிகமாக்கும் என்று கியூபா தலைநகர் ஹவானவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

குறைந்து விட்ட எண்ணெய் விலையால், மோசமாக பாதிப்படைந்துள்ள வெனிசுலா நாட்டின் ஆதரவினை நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தினாலும் ஓரளவு கியூபாவின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது.

எதிர்வரும் காலத்தில் கடுமையான பொருளாதார நிலைமைகளை எதிர்கொள்ள, தயாராக இருக்குமாறு கியூபா அதிபர் ரால் காஸ்ட்ரோ மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.