பிரிட்டன் வெளியேற்றம்: அரசுக்கு கால அவகாசம் வேண்டும் - பிரதமர் தெரீசா மே

  • 14 ஜூலை 2016

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்குத் தேவையான பேச்சுவார்த்தைகளுக்கு தயார் செய்வதற்கு தங்களுடைய அரசுக்கு கால அவகாசம் வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்கல் மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் ஆகியோரிடம் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

இச்சூழலில், தெரீசா மேவின் முயற்சிகள் வெற்றியடைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தெரீசா மேவிற்கு வாழ்த்துக்கள் கூறி சுமுகமான போக்கை கடைப்பிடித்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதில் அதிராப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்க பிரிட்டன் அரசு அவசரமின்றி செயல்படுவது போல தோன்றுவது ஜங்கருக்கு கவலை அளித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுயுள்ளார்.