பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட தெரீசா மே (புகைப்படத் தொகுப்பு)

படத்தின் காப்புரிமை Getty
Image caption பிரிட்டன் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக்கேல் ஃபேலோன், தன் பதவியைத் தக்கவைத்துக்கொண்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்
படத்தின் காப்புரிமை Getty
Image caption டேவிட் கேமரன் அரசில் எரிசக்தி மற்றும் கால நிலை மாற்றத்திற்கான அமைச்சராக இருந்தவர் ஆம்பர் ருட். தற்போது, உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
படத்தின் காப்புரிமை EPA
Image caption போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சரவையில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
படத்தின் காப்புரிமை Getty
Image caption பிரதமர் அலுவலகத்துக்கு முதலில் விரைந்தவர் பிலிப் ஹேமண்ட். அவர், பிரிட்டனின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Image caption 10 டவுனிங் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு தன் கணவர் பிலிப் உடன் வந்த தெரீசா மே , புன்னகையுடன் 'போஸ்' தருகிறார்.
Image caption பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின் பேசிய தெரீசா மே, பிரிட்டன் அரசு அனைவருக்காகவும் உழைக்கும் என்றும், அநீதிகளுக்கு எதிராக போராடும் என்றும் கூறினார்.
படத்தின் காப்புரிமை
Image caption பிரதமர் அலுவலகத்தில் தெரீசா மேவை வரவேற்கும் அலுவலக ஊழியர்கள்
படத்தின் காப்புரிமை PA
Image caption ராணியிடம் இருந்து புதிய அரசை அமைக்க அழைப்பை ஏற்ற பின் பிரதமராக பதவியேற்றார் தெரீசா மே.
படத்தின் காப்புரிமை Getty
Image caption பிரிட்டன் பிரதமராக டவுனிங் வீதியில் டேவிட் கேமரன் செய்தியாளர்கள் முன்னிலையில் ஆற்றிய இறுதி உரை
படத்தின் காப்புரிமை AP
Image caption 10 டவுனிங் வீதியில் உள்ள இல்லத்தின் வாயிற்படியில் கேமரன் குடும்பத்தினரை கட்டி அணைத்த நெகிழ்ச்சி தருணம்.
படத்தின் காப்புரிமை AFP
Image caption டேவிட் கேமரன் மற்றும் அவருடைய மனைவி சமந்தா மற்றும் குழந்தைகள் எல்வென், நான்ஸி, ஃபுளோரன்ஸ் டவுனிங் வீதியிலிருந்து கிளம்பும் காட்சி.
படத்தின் காப்புரிமை PA
Image caption தன்னுடைய ராஜிநாமாவை ராணியிடம் வழங்க பக்கிங்ஹேம் அரண்மனைக்கு செல்லும் போது டவுனிங் வீதியை நோக்கி இறுதியாக கையசைத்த காட்சி.
படத்தின் காப்புரிமை PA
Image caption பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடைசி முறையாக பிரதமர் டேவிட் கேமரன் "பிரதமருக்கான கேள்விகள்" நிகழ்ச்சியை எதிர்கொண்டபின் அவருக்கு கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் எழுந்து நின்று கரகோஷம் செலுத்திய காட்சி