கார் குண்டு தாக்குதலில் உயிர் தப்பினார் ஏடன் நகர ஆளுநர்

  • 15 ஜூலை 2016

ஏமனின் ஏடன் நகர ஆளுநர், அவருடைய வாகனத் தொடரணியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் உயிர் தப்பியுள்ளார்.

Image caption அய்டாரூஸ் அல்-ஸூபாய்ரியை படுகொலை செய்ய நடைபெற்ற பல முயற்சிகளில் இது ஒன்று

அவரை படுகொலை செய்ய நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் அண்மைய ஒன்றான இந்த தாக்குதலில் அய்டாரூஸ் அல்-ஸூபாய்ரி எவ்வித காயமும் அடையவில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் இதற்கு முந்தைய ஆளுநர் கொல்லப்பட்ட பின்னர் அய்டாரூஸ் அல்-ஸூபாய்ரி ஏடன் நகர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.