தீவிரவாதத்தை கண்டித்து உபதேசம் எழுதி மசூதிகளில் பயன்படுத்த வங்கதேசம் ஏற்பாடு

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஒரு மனித உயிரை கொல்வது தான் எல்லா பாவங்களிலும் பெரிய பாவம் - இறைவாக்கினர் முகமது நபி

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகையின்போது வங்கதேசத்தின் மூன்று இலட்சம் மசூதிகளின் இமாம்கள் தீவிரவாதத்தை கண்டித்து போதிக்கக் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

எல்லா பாவங்களிலும் பெரிய பாவம் ஒரு மனித உயிரை கொல்வது என்ற இறைதூதர் முகமது நபியின் கூற்றை மேற்கோள் காட்டி, சிறப்பாக எழுதப்பட்ட ஒரு போதனையை பயன்படுத்த அரசு நடத்துகின்ற இஸ்லாமிய பவுண்டேஷன் வலியறுத்தியுள்ளது.

இஸ்லாமியவாதத் தாக்குதல்கள் காரணமாக கடும் பாதுகாப்பில் இருக்கின்ற டாக்கா தேசிய மசூதியின் இமாம், இந்த போதனையைப் பயன்படுத்திவிட்டு, தீவிரவாதம் தற்போதைய பிரச்சனையாக இருப்பதால் அதை பற்றி பேசுவது சரியானது என்று தெரிவித்திருக்கிறார்.

அரசு மறையுரை வழங்குவதை ஏற்கவில்லை என்று சில பக்தர்கள் பிபிசியிடம் தெரிவித்திருக்கையில், பிறர் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.