பிரிட்டனில் 3000 ஆண்டு பழமை வாய்ந்த குடியிருப்பு - காணொளி

பிரிட்டனில் 3000 ஆண்டு பழமை வாய்ந்த குடியிருப்பு - காணொளி

பிரிட்டனில் சரித்திர முக்கியத்துவம் மிக்க இடங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் ஒரு பகுதியை இங்குள்ள ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் பீட்டர்ஸ்பரோவுக்கு அருகில் வெண்கல காலகட்டத்தை சேர்ந்த ஒரு குடியேற்றத்தை கடந்த பத்து மாதமாக ஆய்வாளர்கள் அகழ்ந்து வருகிறார்கள்.

இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குடியேற்றமாக வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகின்றது. அங்கு அகழ்வுப் பணிகள் பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.