நீஸ் தாக்குதலில் ஈடுபட்ட நபர் அடையாளம் கண்டுபிடிப்பு

பிரான்ஸின் நீஸ் நகரில் 84 பேரைக் கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர், துனீஷியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரான்ஸ் பிரஜை என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP Getty
Image caption நீஸ் கடற்கரை நகரம்

31 வயதான அந்த நபரின்பெயர் மொஹமத் லஹ்வீஸ் புஹ்லெல் என்று தெரியவந்துள்ளது.

சிறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக, போலீசாருக்குப் பரிச்சயமான நபராக அவர் இருந்தார். ஆனால், தீவிரவாத எண்ணம் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் பட்டியலில் அவரது பெயர் இல்லை.

அவரை அடையாளம் கண்டுபிடித்த போலீசார், தற்போது நீஸ் நகரில் அவரது வீடு எங்கு உள்ளது என்பதை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என பிரான்ஸ் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தனியாக லாரியை ஓட்டி வந்தாரா அல்லது யாராவது உடனிருந்தார்களா என்பது தெளிவாகவில்லை.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.