அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்த் : நாடே கண்ணீர் சிந்துகிறது

பிரான்ஸில் கடற்கரைக்கு அருகில் உள்ள நீஸ் நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, மூன்று நாட்கள் துக்க தினம் அனுசரிப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption நீஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்காக அஞ்சலி

அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்த் நாடே கண்ணீர் சிந்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

பாஸ்டில் தினத்தை குறிக்கும் வகையில் நடந்த வாண வேடிக்கையின் இறுதியில் ஒரு கூட்டத்திற்குள் பெரிய லாரி நுழைந்து, குழந்தைகள் உட்பட, குறைந்தது 84 பேரை கொன்றது.

படத்தின் காப்புரிமை AP

லாரி ஓட்டுநர் வளைந்து சென்று சாலை மற்றும் நடைபாதையில் இரண்டு கிலோமீட்டருக்கு சென்று பாதசாரிகளை மீது வண்டியைச் செலுத்தினர்.

ஓட்டுநரை காவல் துறை அதிகாரிகள் சுடுவதற்கு முன் அவர் சுடத் தொடங்கினர்.அந்த லாரியில் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

படத்தின் காப்புரிமை AP

பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்தும் பிரதமர் மானுவேல் வால்ஸும் நீஸ் நகருக்கு வந்துள்ளனர்.

அவர்கள் முன்னதாக பாரிசில் பாதுகாப்பு பற்றிய அவசர கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பின்னர் வால்ஸ் பேசுகையில், தேசிய தினத்தில் நடந்த தாக்குதல் பிரான்ஸின் ஆத்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.

ஆனால் இந்த நாடு வன்முறையால் தன்னுடைய ஸ்திரத்தன்மையை இழக்க அனுமதிக்காது. பிரான்ஸ் எப்போதும் தீவிரவாத அச்சுறுத்தலால் நிலைகுலைந்துவிடாது என்றார்.

ஜெர்மனி மற்றும் இத்தாலியில் அதிகாரிகள் பிரான்சுடனான தங்களது எல்லை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.