நீஸ் தாக்குதல்: எவ்வளவு கத்தியும் நிறுத்தவில்லை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நீஸ் தாக்குதல்: எவ்வளவு கத்தியும் நிறுத்தவில்லை - காணொளி

பிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் எண்பத்து நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸின் தெற்கு கடற்கரை நகரான நீஸில் , பாஸ்டில் தின கொண்டாட்டங்களின் முடிவில் இது நடந்துள்ளது.

பெரும் வாண வேடிக்கையை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

இரவு பதினொரு மணியளவில் ஒரு பெரிய லாறி நடைபாதையில் ஏறி ஓடியது.

ஆட்களை மோதிக்கொண்டே அது இரண்டு கிலோமீட்டர்கள் ஓடியது. போலிஸார் தாக்குதலாளியை சுட அது நின்றது.

அதிபர் பிரான்ஸுவா ஒலந்த் அவசர நிலையை இப்போது நீடித்துள்ளார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.