வடகொரிய அனாதை சிறுவர்களை கடத்த முயற்சிப்பதாக தென்கொரியா மீது புகார்

  • 15 ஜூலை 2016

தென் கொரிய உளவுத் துறையின் ஆணைப்படி, அனாதை சிறுவர்களைக் கடத்த முயற்சித்ததாக ஒரு நபரை வட கொரியா வெளிப்படுத்தியது.

படத்தின் காப்புரிமை Getty

அவர் கடத்தும் ஒவ்வொரு குழந்தைக்கும் பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக, பியாங்யாங்கில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில் கண்ணிரோடு கோ-ஹையான்-சோல் தெரிவித்தார்.

கோ-ஹையான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வட கொரியாவிலிருந்து தென் கொரியாவுக்கு தப்பியோடினார்.

தென் கொரிய உளவுத் துறையால் பயிற்சியளிக்கப்பட்டு, வட கொரியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இது வெறும் பரப்புரை என்று நிராகரித்திருக்கும் தென் கொரியா, அதனுடைய குடிமகனை திரும்ப நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரியுள்ளது.