பாகிஸ்தான் மாடல் அழகி கந்தீல் பலூச் கொலை

படத்தின் காப்புரிமை QANDEEL BALOCH TWITTER

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமான மாடல் அழகி கந்தீல் பலூச், கெளரவ கொலைகளின் வெளிப்பாடாக, தனது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவெளியில் தைரியமாக தனது புகைப்படங்களை பதிந்ததற்காகவே பிரபலம் பெற்றவர் கந்தீல் பலூச்.

சில நேரங்களில் வெளிப்படையான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து வந்தார்.

தன்னை தற்கால நவீன பெண்ணியவாதியாக வர்ணித்துக் கொண்டார். ஆனால், பழமைவாதிகள் அவருடைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புக் தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை QandeelQuebee

பாகிஸ்தானில் முக்கிய மதகுருக்களில் ஒருவரான முஃப்தி குவாவி உடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியானதை தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார் கந்தீல் பலூச்.

படத்தின் காப்புரிமை QandeelQuebee

அந்த சம்பவத்தின் விளைவாக மதகுருவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.

கந்தீல் பலூச் குரல்வளையை அவருடைய சகோதரர் நெரித்துக் கொன்றதாக போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.