தாய்லாந்து சிறையில் கலவரம்: 3 கைதிகள் கொலை

தாய்லாந்தின் தென் பகுதியில் சிறை ஒன்றில் நிகழ்ந்துள்ள கலவரத்தில் மூன்று சிறை கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption குடும்பத்தினர் அதிகமுறை சந்திக்க அனுமதி, தொலைக்காட்சி செய்திகளை பார்க்க வசதி போன்ற கோரிக்கை பட்டியல் வழங்கி கைதிகள் கலவரம்

பாட்டானி மாகாணத்திலுள்ள ஒரு சிறையில் சுமார் ஆறு மணிநேரம் நீடித்த இந்த கவலரத்தில் ஏறக்குறைய 100 கைதிகள் ஈடுபட்டனர்.

சிறையின் சமையலறைக்கு தீ வைத்த அவர்கள், பின்னர் ஒரு கட்டிடத்தையும் கொழுத்தியுள்ளனர்.

குடும்பத்தினரை அதிக முறை சந்திக்க அனுமதிப்பது, தொலைக்காட்சி செய்திகளை பார்க்க வசதியளிப்பது போன்றவை உள்பட ஒரு கோரிக்கை பட்டியலை சிறை கைதிகள் வழங்கியுள்ளனர்.

கண்ணீர் புகை குண்டுகள், இரப்பர் குண்டுகளை பயன்படுத்தி காவல்துறையினர் அவ்விடத்தில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தினர்.

போதை பொருட்கள் தொடர்பான குற்றங்களுக்கு தண்டனை பெற்ற பெரும்பாலோர் இருக்கும் இந்த சிறையில் மொத்தம் 1800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.