துருக்கியில் இன்சர்லிக் விமானத் தளத்திற்கு சீல் வைத்துள்ளதாக தகவல்

துருக்கி நாட்டு உள்ளூர் அதிகாரிகள் இன்சர்லிக் விமானத் தளத்திற்கு சீல் வைத்துள்ளதாக துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP

இந்த தளம், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை தடுக்க அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட கூட்டமைப்பால் பயன்படுத்தப்பட்டதாகும்.

இந்த தளத்தைச் சுற்றியுள்ள வான் மண்டலம் மூடப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கிரீஸ் நாட்டிற்குள் துருக்கி ராணுவ ஹெலிகாப்டரில் வட நகரமான லெக்ஸாண்ட்ரூபோலிஸில் நுழைந்த 8 பேரை கைது செய்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

அந்த நபர்கள் கிரீஸில் அரசியல் தஞ்ச கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், அவர்களை திருப்பி அனுப்பும்படி கோரப்போவதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.