துருக்கி பிரதமர் : ஆட்சிக் கவிழ்ப்பு ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு கறுப்பு கறை

துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை துருக்கியின் ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு கறுப்பு கறை என்று விவரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை REUTERS

நாட்டின் விடுதலைக்காக 161 பொதுமக்கள் இறந்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த எழுச்சியில் பங்கெடுத்தவர்கள் குர்திஸ்தான் தீவிரவாத அமைப்பான பி.கே.கே என்று அறியப்படும் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியை விட மிக மோசமான தீவிரவாத குழுவை சேர்ந்தவர்கள்.

இந்த திட்டத்தை தீட்டிய 20 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை தடுக்க மக்கள் வீதிகளில் இருக்குமாறு அதிபர் எர்துவான் கூறிய கருத்துக்களை அவர் எதிரொலித்தார்.