துருக்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு உலக தலைவர்கள் கண்டனம்

அமெரிக்கா அதிபர் ஒபாமா துருக்கியின் நிலை குறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

உலகின் பல நாடுகளும் இந்த ஆட்சிக் கவிழ்ப்பிற்கான முயற்சியை கண்டித்துள்ளன.

படத்தின் காப்புரிமை EPA

ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்கெல் தனது நாடு ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்போரின் பக்கம் இருக்கும் என்று தெரிவித்தார்.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் -மார்க் அய்ரால்ட் துருக்கியின் ஜனநாயகம் உறுதியானதாக வெளிப்படும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

பிரிட்டனின் புதிய வெளியுறவு துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன், துருக்கி அரசுக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Twitter
Image caption துருக்கி குறித்து பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சர் போரிஸ் ஜான்சனின் ட்விட்டர் செய்தி

பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது.

ஆனால் துருக்கியின் ''சட்டப்பூர்வ தலைமை"யோடு இணைந்து வேலைசெய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.