பிரிட்டன் - ஆஸ்திரேலியா சுதந்திர வர்த்தகத்திற்கு டார்ன்புல் ஆர்வம்

  • 17 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆஸ்திரேலியா பிரிட்டனுடன் சுதந்திர வர்த்தகம் மேற்கொள்ள ஆர்வம்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக, அண்மையில் வாக்களித்திருக்கும் பிரிட்டனுடன், சுதந்திர வர்த்தக ஒத்துழைப்பு மேற்கொள்ள ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல் அழைப்புவிடுத்துள்ளார்.

இத்தகைய வர்த்தக ஒத்துழைப்பை முன்னுரிமையானதாக கருதுவதாக டார்புன் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய பிரதமர் சுதந்திர வர்த்தக உடன்பாட்டிற்கு ஆர்வமாக இருப்பது, புதிய பிரிட்டன் பிரதமருக்கு மாபெரும் ஊக்குவிப்பாக அமையும் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை PA
Image caption முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுடன் மேற்கொள்ளும் வர்த்தக ஒத்துழைப்புகள் பிரிட்டனின் வளர்ச்சிக்கு துணைபுரியும்

முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுடன் வைத்திருக்கும் இத்தகைய வர்த்தக ஒத்துழைப்புகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயான வெற்றிகரமான வாழ்க்கைக்கு பிரிட்டனுக்கு உதவியாக இருக்கும் என்று பிரதமர் தெரீசா மே நம்புகிறார்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நிலையிலிருந்து ஐக்கிய ராஜ்யம் விலகுவது வரை எவ்வித உடன்பாடுகளையும் இறுதி செய்ய முடியாது.

ஆஸ்திரேலியாவுடனான இரு தரப்பு வர்த்தகம் தற்போது ஆண்டுக்கு 16 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது,