பிரிட்டன் வெளியேறும் முன்பு குடிபெயரும் ஐரோப்பிய மக்களின் நிலை என்னவாகும்?

  • 17 ஜூலை 2016

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான பேச்சுவார்த்தைக்கு பொறுப்பான பிரிட்டன் அமைச்சர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, பிரிட்டனுக்கு இடம்பெயரும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு நாட்டில் தொடர்ந்து குடியிருக்கும் உரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பில்லை என்பதை குறிப்புணர்த்தியிருக்கிறார்.

இதுகுறித்து டேவிட் டேவிஸ், ஸ்கை நியூஸிடம் தெரிவிக்கையில், பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமையை பாதுகாக்கும் எந்த ஓர் ஏற்பாடும் காலவரையறைக்கு உட்பட்டது என கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் வாழும் பிரிட்டன் குடிமக்களின் நிலை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் உட்படுத்தி பேச்சுவார்த்தைகள் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.