சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த விபத்தில் 8 பேர் பலி

  • 17 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை Getty
Image caption கோப்பு படம்

கிழக்கு சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த மின் தூக்கி (லிஃப்ட்) ஒன்று 18 மாடிகளை கடந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

மின் தூக்கிக்குள் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர்.

ஷான்தொங் மாகாணத்தில் உள்ள லொங்கோவ் நகரில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

சில முன்னேற்றங்கள் உள்ள போதிலும், கட்டுமானப் பகுதிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் புறக்கணிக்கப்படுவது சீனாவில் வாடிக்கையாக உள்ளது என செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.