நீஸ் தாக்குதல் தொடர்பாக மேலும் இருவர் கைது

  • 17 ஜூலை 2016

நீஸ் நகரில் 80 பேரை பலி வாங்கிய டிரக் தாக்குதல் தொடர்பாக மேலும் இரண்டு பேரை, பிரான்ஸ் போலிஸார் கைது செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இது தொடர்பாக ஒரு நபரையும் ஒரு பெண்மனியையும் கைது செய்துள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது;

இந்த நபர்களுக்கும், லாரியை ஓட்டி வந்து சுட்டுக் கொல்லப்பட்ட, துனீஷிய நபரான மொஹம்மட் லுஹ்வாஸ் ஃபூலெலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய ஐந்து நபர்கள் போலிஸார் பிடியில் உள்ளனர்.

முன்னதாக உள்துறை அமைச்சர் பெர்னார் காஸினாவ், பாதுகாப்பை மேம்படுத்த அனைத்திற்கும் தயாரக உள்ள பிரான்ஸ் நாட்டின் தேசப்பற்றாளர்கள் ரிசவ் படையில் சேர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.