நீஸ் தாக்குதல்: கூட்டத்தில்சுற்றித் திரிந்த பின் லாரியில் ஏறிய கொலையாளி

படத்தின் காப்புரிமை AP

நீஸ் நகரில் வியாழனன்று டிரக் தாக்குதலில் 80 பேருக்கும் மேலானவர்களை கொன்ற துனிஷிய நபர், கூட்டத்தில் சிரித்தவாறு இருக்கும் புகைப்படத்தை, தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக அனுப்பியதாக செய்திகள் வந்துள்ளன.

மொஹமது லுஹ்வாஸ் ஃபூலெலுலின் சகோதரர் ஜாபீர் துனீஷியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், அந்த புகைப்படத்தில் அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், உற்சாகத்துடன் காணப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP

அந்த புகைப்படம் சரியானதா சரிபார்க்க முடியவில்லை.

தாக்குதலாளி மீது குற்றப்பதிவு இருந்ததாகவும் அது பிரான்ஸ் நாட்டு போலிஸாருக்கு தெரியும் எனவும் ஆனால் புலானாய்வு துறைக்கு தெரியாது என்றும் கூறப்படுகிறது.

அவனது இந்த தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்று இதுவரை தெளிவாக தெரியவில்லை.