அமெரிக்காவில் போக்கிமான் கோ விளையாடிய இருவர் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்க மாகாணமான ஃபளோரிடாவைச் சேர்ந்த ஒருவர், போக்கிமான் கோ விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்த இரு பதின்ம வயது நபர்களை திருடர்கள் என சந்தேகித்து, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

இரவு நேரத்தில், ஒர்லாண்டோவின் வட கிழக்கு பகுதியில் உள்ள பனை மர கடற்கரை பகுதியைச் சுற்றி வந்துக் கொண்டிருந்த அந்த பதின்ம வயது நபர்களை, தனது வீட்டின் வெளியே கண்டார் அந்த மனிதர்.

வேகமாக அந்த இடத்திலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த காரின் அருகில் சென்று துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் அவர்.

அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த நாட்களில் போக்கிமான் கோவிற்கு அதிக ரசிகர்கள் கிட்டியுள்ளனர்.

இந்த விளையாட்டை விளையாடுபவர்கள், நிஜ வாழ்க்கை இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு மெய்நிகர் போக்கிமான் அரக்கர்களை தங்கள் தொலைபேசியில் பெற்றுக்கொள்ளலாம்.