அலெப்போ நகரில் அரசுப் படைகளின் பிடி இறுகியது

  • 17 ஜூலை 2016

சிரியாவின் அலெப்போ நகரில், போராளிகளின் பிடியில் இருக்கும் பகுதிகளில் அரசுப் படைகள் தனது பிடியை வலுப்படுத்தியுள்ளதாக சிரியா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

அரசுப் படைகள் மற்றும் அதன் கூட்டணிகள், போராளிகளின் மீதமுள்ள ஒரே ஒரு விநியோக சாலையையும் பிடித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாதத் தொடக்கத்தில், சிரிய ராணுவம் கஸெல்லோ சாலையின் மேலுள்ள பகுதியைக் கைப்பற்றியது. எனவே அவர்கள் கீழ் நோக்கி சுடுவதற்கும், போக்குவரத்தை திறம்பட முடக்கவும் ஏதுவாக அமைந்துள்ளது.

கஸெல்லோ சாலையை கைப்பற்றியதாக வந்துள்ள செய்திகளின்படி அலெப்போவின் கிழக்கு பகுதி முழுவதுமாக அரசு தனது பிடியை வலுப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.