துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: தடுப்புக் காவலில் 6 ஆயிரம் பேர்

படத்தின் காப்புரிமை AFP

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் படையினரை சுற்றி வளைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை ராணுவ தளங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.

துருக்கி அரசை எதிர்த்து செயல்பட்டதற்காக மேலும் பல நீதிபதிகள் மற்றும் அரசு வழக்குரைஞர்களை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

துருக்கி முழுவதும் கட்டுபாட்டிற்குள் வந்துவிட்டதாகவும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட மேலும் சிலர் சரணடைய வேண்டி உள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.

இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை சார்ந்த துருக்கி மதகுரு ஃபேதுல்லா ஹியூலெனை இவர்கள் பின்பற்றினார்கள் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை REUTERS
Image caption ஃபேதுல்லா ஹியூலென்

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு ஃபேதுல்லா ஹியூலென் திட்டமிட்டார் என அரசு குற்றஞ்சாட்டுகிறது.

ஆனால், ஹியூலென் இதை மறுத்துள்ளார்.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டோர் மீதான விசாரணையில் துருக்கி அரசானது அதன் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என்று துருக்கி அதிகாரிகளை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.