அதிபருக்கு ஆதரவாக நகர தெருக்களில் குழுமியிருக்கும் துருக்கிய ஆதரவாளர்கள்

  • 17 ஜூலை 2016

ஆயிரக்கணக்கான துருக்கியர் பாடல்களை பாடி கொண்டும், தேசியக் கொடியை அசைத்து கொண்டும் அதிபர் ரசீப் தையிப் எர்துவானுக்கு ஆதரவாக இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரத் தெருக்களில் குழுமியிருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை epa

இஸ்தான்புல்லில் உள்ள முக்கிய சதுக்கங்களில் நிறைந்து காணப்படும் அவர்கள், தங்களுடைய மண்ணையும் ஜனநாயகத்தையும் படையினர் எடுத்துவிட முடியாது என்று கூறிக்கொண்டிருக்கின்றனர்.

இரவு முழுவதும் முக்கிய சதுக்கங்களில் குழுமியிருக்கும்படி துருக்கி அரசு அதன் ஆதரவாளர்களிடம் வலியுறுத்தி இருக்கிறது.

சனிக்கிழமை மதியத்திற்கு பிறகு பல சர்வதேச விமான நிறுவனங்கள் இடைநிறுத்தியிருந்த தங்களின் விமானச் சேவையை இஸ்தான்புல் நகருக்கு தொடங்கின.