வங்கதேச அடுக்குமாடி தொழிற்சாலை விபத்தில் 38 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

வங்கசேத தலைநகர் டாக்காவில் மூன்று வருடங்களுக்கு முன் அடுக்குமாடி தொழிற்சாலை ஒன்று இடிந்த விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக 38 பேர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை BBC Bangla

நாட்டின் மிக மோசமான தொழிற்சாலை விபத்தாக கருதப்பட்ட, ரானா ப்ளாசா என்ற அந்த கட்டிட விபத்தில், 1100 க்கும் மேலானோர் பலியாகினர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆடைத் தயாரிப்பு தொழிலாளர்கள்.

குற்றம் சுமத்தப்பட்டவர்களில், அந்த கட்டடத்தின் உரிமையாளர் ஷோயல் ரானா மற்றும் அவரது பெற்றோரும் அடங்குவர்