ஹெச்ஐவி தொற்றுடையோரின் தனிப்பட்ட விபரங்கள் கசிவா? சீனா புலனாய்வு

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஹெச்ஐவி தொற்றுடையோரின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்திருக்கலாம் என்பதால் புலனாய்வு ஒன்று தொடங்கியுள்ளது

ஹெச்ஐவி தொற்றுடையோரின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்திருக்கலாம் ஏன்ற சந்தேகத்தால் புலனாய்வு ஒன்றை சீனாவின் நோய் தடுப்பு மையம் தொடங்கியுள்ளது.

சீனாவின் குறைந்தது 30 மாகாணங்களில் வாழும் ஹெச்ஐவி தொற்றுடையோருக்கு, அரசு அதிகாரிகள் என்று கூறி மோசடிக்காரர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்த பின்னர் இந்த விபரங்கள் கசிந்திருப்பது கண்டறியப்பட்டது.

Image caption சீனாவின் குறைந்தது 30 மாகாணங்களில் வாழும் ஹெச்ஐவி தொற்றுடையோருக்கு வந்த தொலைபேசி அழைப்பில், அரசு உதவி பெற ஒரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர்

தொலைபேசி மூலம் பரந்த அளவில் நடத்தப்பட்டுள்ள இந்த ஊழலில், அரசின் உதவி பெறுவதற்காக ஒரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று ஹெச்ஐவி தொற்றுடையோரிடம் கூறப்பட்டுள்ளது.

தரவுகளின் சங்கேத (குறியாக்க) வழிமுறைகளை மேம்படுத்தப் போவதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.