நிழல் பங்கு பரிமாற்ற ஊழல் குற்றச்சாட்டில் தென் கொரிய அரசு வழக்கறிஞர் கைது

  • 18 ஜூலை 2016
படத்தின் காப்புரிமை AP

தென் கொரியாவின் முன்னிலை அரசு வழக்கறிஞர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜின் கியுங்-ஜூன் என்பவர் நிழல் பங்கு பரிமாற்றகளிலிருந்து மில்லியன் கணக்கான (10 லட்சம் என்பது ஒரு மில்லியன்) அமெரிக்க டாலர்களை பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இணையதள விளையாட்டு தயாரிப்பு நிறுவனமான நெக்ஸான் உரிமையாளரிடம் இருந்து கடனாக பணம் பெற்ற இவர், அந்த நிறுவனத்தின் பங்குகளையே வாங்கி இரண்டு மடங்கு அதிக தொகையில் அவற்றை திருப்பி விற்றுள்ளார்.

நெக்ஸான் ஜப்பான் நிறுவனத்தில் பட்டியல் இடப்படாத பங்குகளை கடன் பணத்தை கொண்டு வாங்கிய அவர், அந்த நிறுவனம் பொதுவாக பங்குகளை விற்றபோது பத்து மில்லியன் (ஒரு கோடி) அமெரிக்க டாலர் அதிக இலாபத்திற்கு தன்னுடைய பங்குகளை விற்றுள்ளார்.

மேல்தட்டு அரசியல் மற்றும் வணிக வர்க்கத்தினர் மத்தியில் பரவியிருக்கும் ஊழலின் எடுத்துக்காட்டாக தென் கொரிய ஊடகங்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளன.