கொலம்பியா: அமைதி உடன்பாட்டை பற்றி மக்கள் கருத்தறிய வாக்கெடுக்கலாம் - அரசியல் சாசன நீதிமன்றம்

படத்தின் காப்புரிமை RIA Novosti
Image caption இறுதியிவ் எட்டப்படும் அமைதி உடன்பாடு அரசியல் ரீதியான முடிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டும் - கொலம்பிய அரசியல் சாசன நீதிமன்றம்

கொலம்பிய அரசுக்கும், எப்.எ.ஆர்.சி. கிளர்ச்சி குழுவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் அமைதி உடன்பாடு ஒன்றை, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு உட்படுத்த முடியும் என்று கொலம்பியாவின் அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

ஆனால், அவ்வாறு வாக்கெடுப்பு நடத்துவது, அந்த அமைதி உடன்படிக்கையானது அரசியல் சாசனத்தின் ஒரு பகுதியாகிவிட்டது என்று பொருள் தராது என அந்த நீதிமன்றத்தின் தலைவர் மரியா விக்டோரியா காலியே தெரிவித்திருக்கிறார்.

இந்த முயற்சியின் இறுதியில் எட்டப்படும் எந்தவொரு உடன்பாடும் ஒரு அரசியல்ரீதியான முடிவாகத்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

அமைதி பேச்சுவார்த்தைகளின் இறுதி முடிவை கொலம்பிய மக்களிடம் விடுவதாக அதிபர் ஹூவன் மென்வெல் சான்டோஸ் உறுதி அளித்திருக்கிறார்.