ஜெர்மனி: ரயில் பயணிகள் மீது கோடரியால் தாக்குதல்

படத்தின் காப்புரிமை EPA
Image caption 17 வயதான ஆப்கானிலிருந்து குடிபெயர்ந்தவர் ரயிலில் 4 பேர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வெர்ஸ்பர்க் நகருக்கு அருகில் ரயிலில் வைத்து 17 வயதான ஆப்கானிலிருந்து புலம்பெயர்ந்தவர் ஒருவர் 4 பேர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இவர் கோடரி மற்றும் கத்தியை வைத்து தாக்கியதால், தாக்குதலுக்கு உள்ளான மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பதால் 14 பயணிகள் அதற்குரிய சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்த கோடரி தாக்குதலை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த 14 பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல்தாரி காவல்துறையினரை தாக்க முயன்றதால், அவர் சுட்டு கொல்லப்பட்டார். என்று பவாரியா மாநில உள்துறை அமைச்சர் யோவாகீம் ஹெர்மான் தெரிவித்திருக்கிறார்.

இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று அவர் கூறினார்.

பிரான்சின் எல்லை பகுதியில் நடத்தப்படும் இஸ்லாமியவாத வன்செயல்களால் இவ்வாறு நடந்திருக்கலாம் என்று புரிந்துகொள்ளப்படுவதாக ஜெர்மனியிலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.