கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்ட மியான்மர் ராணுவம்

மியான்மரின் வட புற ஷான் மாநிலத்தில் இனக் கிளர்ச்சி குழுக்களுடனான மோதலில் ஐந்து கிராமவாசிகளை கொன்று விட்டதாக மியான்மர் ராணுவம் அரிதாக ஒப்புக் கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

இந்த வழக்கு ராணுவ நீதிமன்றத்தில் நடைபெறுவதாகவும் , பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படும் எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

சிப்பாய்கள் டஜன் கணக்கான நபர்களை சுற்றி வளைத்ததாகவும் பிறகு உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரு ஆழமற்ற சவக்குழியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஷான் மாநிலத்திலிருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

சிவிலியன் ஆட்சியாக மியன்மார் மாறிய போதிலும் கணிசமான அதிகாரத்தை உடைய மியான்மரின் ராணுவப் படைகள் மீது அதிகமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன; ஆனால் படையினர் மீது அதற்கு குற்றங்காணப்பட்டு தண்டனை வழங்கப்படுவது அரிதான விஷயம்.