ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரேசில்: "வாட்ஸ்-அப்புக்கு" இடைக்காலத்தடை ஏன்?

பிரேசிலில், நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடையைத் தொடர்ந்து நாடு முழுவதும் பிரபல தகவல் தொடர்பு செயலியான WhatsApp தற்காலிகமாக செயலிழந்து போனது.

குற்றப்புலனாய்வு தொடர்பாக பிரேசில் காவல்துறையினர் தகவல் கேட்டபோது அந்நிறுவனம் தர மறுத்ததால் நீதிபதி இந்த தடையை விதித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இத்தகைய தடை விதிக்கப்பட்டது.

கீழ் நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நான்கு மணி நேரத்தில் நீக்கியது.

நான்குமணி நேரமே நீடித்த இந்த தடையால் ஒன்பது கோடிக்கும் அதிகமான WhatsApp பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.