அதிபருக்கு ஆதரவாக ஜிம்பாப்வேயில் ஆர்ப்பாட்டம்

அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜிம்பாப்வேயில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

முகாபே அரசிற்கு எதிராக, குறிப்பாக சீர்குலைந்துள்ள பொருளாதார நிலைமைக்கு எதிராக நடைபெற்ற சமீபத்திய தொடர் போராட்டங்களுக்கு பிறகு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற, அதிக மக்கள் பங்கு கொண்ட வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு தசாப்த காலத்தில் மிக பெரிய போராட்டமாக விவரிக்கப்படுகிறது.

செவ்வாய்கிழமை அன்று அதிபர் முகாபே, மத ஊழியர் இவான் மவாரிரேக்கு எதிராக கடும் சொற்களை பயன்படுத்தி தாக்கி பேசியுள்ளார்.

இவான் மவாரியின் சமூக ஊடகப் பரப்புரைதான் நாடு முழுவதுமுள்ள மக்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பணிக்கு செல்லாமல் வீடுகளில் இருக்க செய்திருந்தது.