ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெரூசலேம்: அச்சத்தோடு அங்கீகாரம் கோரும் ஒருபாலினத்தவர்

ஜெருசலேம் நகரில் ஒருபால் உறவாளர்கள் தமது வருடாந்த ஊர்வலம் நடத்துகின்றனர்.

சென்ற ஆண்டு இதே போன்ற ஊர்வலத்தில் புகுந்த கடும்போக்கு பழமைவாத யூதர் பலரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். அதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த ஊர்வலத்தின் ஏற்பாட்டாளர் டாம் கானிங் பிபிசிக்கு அளித்த பேட்டியில் மதவாதிகளின் எதிர்ப்பு காரணமாக ஜெருசலேத்தில் வருடத்தின் இந்த ஒருநாளில் மட்டுமே ஒருபால் உறவாளர்கள் சகஜமாக வெளியில் வர முடிவதாக தெரிவித்தார்.

சென்ற ஆண்டு நடந்த தாக்குதலைப்போல இந்த ஆண்டும் யாரேனும் தாக்குதல் நடத்தலாம் என்கிற அச்சம் நகரிலுள்ள ஒருபால் உறவாளர்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.