தெற்கு சூடான் : கடும் சண்டையில் குழந்தைகளும் காயம்

தெற்கு சூடான் : கடும் சண்டையில் குழந்தைகளும் காயம்

தெற்கு சூடானின் தலைநகர் ஜுபாவில் படையினருக்கு இடையில் இம்மாதம் முற்பகுதியில் ஆரம்பமான சண்டைகளில் ஐநூறு பேர் வரை இறந்துள்ளதாக நம்பப்படுகின்றது.

இரண்டாயிரத்து பதின்மூன்றில் அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. கடந்த ஏப்ரலில் அங்கு ஒரு போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அது மூன்று மாதங்கள் கூட நின்று பிடிக்கவில்லை. பதற்றம் பெரும் சண்டையாக மாறிவிட்டது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

(இதில் மனதை சங்கடப்படுத்தக்கூடிய சில காட்சிகளும் இடம்பெறுகின்றன.)