மகளை "கௌரவக்கொலை" செய்த மகனை தண்டிக்கக்கோரும் பெற்றோர்

மகளை "கௌரவக்கொலை" செய்த மகனை தண்டிக்கக்கோரும் பெற்றோர்

பாகிஸ்தானின் இணைய தாரகையாக வர்ணிக்கப்பட்ட மாடல் அழகி கந்தீல் பலூச்சின் கொலை தொடர்பாக மேலும் இருவரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவரை கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவரது சகோதரர் தானே தமது தமக்கையை "கௌரவக்கொலை செய்ததாக" ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கந்தீல் பலூச்சின் பெற்றோரை பிபிசி சந்தித்தது. தமது மகளை கொடூரமாக கொன்ற தங்கள் மகனை தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.