பிரிட்டன் நாடாளுமன்ற குழு : தீவிரவாதத்தை எதிர்க்கும் யுத்தியை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்

தீவிரவாதத்தை எதிர்க்கும் யுத்தியை பிரிட்டன் அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் ஏனெனில்,அது நிலைமையை மோசமாக மாற்றிவருகிறது என நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரிட்டன் நாடாளுமன்றம்

மத பழமைவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது சமூகங்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் என்று மனித உரிமைகள் மீதான கூட்டுக் குழு கூறியுள்ளது.

முடிவு செய்யப்பட்டுள்ள சட்டமானது பிரிட்டன் இஸ்லாமியர்ககளின் ஆதரவை வலுவற்றதாக்கும் என்றும், அவர்களின் ஆதரவு தான் தீவிரவாதத்திற்கு எதிரான சண்டையில் மிக உயர்ந்த சொத்தாகும் என்றும் தெரிவித்துள்ளது .

தீவிரவாதத்திற்கு எதிரான மசோதாவிற்கான திட்டம் முதலில் 2015ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் உள்ளடக்கம் குறித்து குறைந்த விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.