சீன அரசுக்கு எதிராக போராடும் முன்னாள் அதிகாரி மீது லஞ்ச குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை AP
Image caption லின் சுலூவன்

தென் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அதிகாரி ஒருவர் மீது லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டதை தொடர்ந்து பல நாட்களாக போராட்டம் வெடித்த சூழலில், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம், குவான்டூங்கில் உள்ள வூகன் கிராமத்தை சேர்ந்த முன்னாள் தலைவர் லின் சுலூவன் அரசு தொலைக்காட்சியில் தோன்றி தான் ஊழல் செய்ததாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால், அவர் நிர்பந்தத்தின்பேரில் அவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக கிராமத்தில் உள்ள மக்கள் பலரும் நம்பினார்கள். தொடர்ந்து, வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சீன அரசாங்கம், நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தியதால் அவர் அவ்வாறான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்று கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது அந்த கிராமத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை தணிப்பதற்காக திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில், லின் வூகன் கிராமத்தின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.