இராக்கிற்கு ராணுவ ஆதரவு மேலும் பலப்படுத்தப்படும்: ஒல்லாந்த்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிற்கு எதிராக போரிட்டுக் கொண்டிருக்கும் இராக் அரசு படைகளுக்கு வழங்கும் ராணுவ ஆதரவை மேலும் பலப்படுத்தப் போவதாக பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்த் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

சில வாரங்களில் பிரான்ஸ் நாட்டின் கனரக பீரங்கிகள் விநியோகம் செய்யப்படும் எனவும் செப்டம்பர் மாத கடைசியில் அந்தப் பகுதியில் விமானம் தாங்கி கப்பல் ஒன்று நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், நீஸ் நகரில் டிரக்கை ஓட்டிச் சென்று 84 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு நீஸ் தாக்குதல்தாரியை தங்களது சிப்பாய்களில் ஒருவர் என விவரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.